Uncategorised
ஊராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட82 வயது மூதாட்டி வெற்றி



ஊராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட82 வயது மூதாட்டி வெற்றி
திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 82 வயது மூதாட்டி விசாலாட்சி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் வெள்ளக்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 82 வயது மூதாட்டி விசாலாட்சி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அந்தப் பகுதியிலேயே அதிக வயது கொண்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.