சினிமா
காதலித்து தான் திருமணம் செய்வேன் நடிகை அணு இம்மானுவேல்



காதல் என்பது அழகான அற்புதமான உணர்வு. நிச்சயமாக காதலித்து தான் திருமணம் செய்வேன்.
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை அணு இம்மானுவேலுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேசிய அணு இம்மானுவேல், ‘காதல் என்பது அழகான அற்புதமான உணர்வு. நிச்சயமாக காதலித்து தான் திருமணம் செய்வேன். ஆனால் அதற்க்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது.