ஆன்மீகம்

அத்திவரதர் தரிசனம் 16 ந் தேதி நள்ளிரவுடன் நிறைவு

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். வரும் ஆகஸ்ட் 16 ந் தேதி நள்ளிரவுடன் தரிசனம் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனம் நிறைவுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து தரிசன வரிசையை அடைகிறார்கள். நேற்று 4 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் அன்னதானம் மற்றும் குடிநீர் பால் உள்ளிட்டவை வழங்கினர்.

இதற்கிடையே அத்திவரதர் தரிசனம் ஒரு நாள் முன்கூட்டியே வரும் ஆகஸ்ட் 16 ந் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுவதாகவும், மறுநாள் அத்திவரதரை குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

முன்னதாக 15 ந்தேதியுடன் விஐபி தரிசனம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்கு வாசம் செய்ய உள்ள அனந்த சரஸ் குளம் தூர் வாரப்பட்டு, உள் மண்டபம் சீரமைப்பு பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close