தமிழ் நாடு
பிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி



பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனை சந்திக்கும் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது
100 நாட்கள் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 55 -வது நாளை எட்டியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பாத்திருந்த நிலையில் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை வெளியேறி உள்ளார். இன்று வெளியான ப்ரொமோ வீடியோவில் மதுமிதா வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பிக்பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவின. அதை நிரூபிக்கும் வகையில் நடிகை மதுமிதா கையில் கட்டுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்!