10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..



தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் – 1 கப்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
பச்சை மிளகாய் – 3
தக்காளி (பொடியாக நறுக்கியது ) – 1
கருவேப்பிலை – சிறிதளவு
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் அவலை போட்டு தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு இட்லி பாத்திரத்தில் நாம் புட்டு மாவு வேகவைப்பது போலவே அரைத்த அவல் பொடியை சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். அப்போது தான் அவல் புட்டு நன்றாக இருக்கும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு தக்காளி, உப்பு,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் அவல் புட்டை எடுத்து இதில் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.