சினிமா
ஒத்த செருப்பு படத்துக்கு விருது நடிகர் பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா



ஒத்த செருப்பு படத்துக்கு விருது நடிகர் பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா..
ஒத்த செருப்பு படத்தை பார்த்துவிட்டு அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன்.
புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார். ஒத்த செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்
இயக்குனர்கள் பாக்யராஜ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, சென்னை சர்வதேச திரைப்பட விழாத்தலைவர் ஈ.தங்கராஜ், விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்….