கருப்பு பணம் பதுக்கிய அறக்கட்டளை நிறுவனம்



இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. வரி பிரச்சினை இல்லாததால், அங்கு அவர்கள் பணத்தை போட்டு வைக்கிறார்கள்
அந்த வங்கி கணக்கு விவரங்களை அவர்கள் பிறந்த நாட்டுடன் பகிர்ந்துகொள்வதற்காக, சுவிட்சர்லாந்துக்கு உலக அளவில் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக, சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்து கொண்டது.
முதல் முறையாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நூற்றுக்கணக்கான வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அடுத்தடுத்து வங்கி கணக்கு விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
கேமன் தீவுகளில் தொடங்கப்பட்ட பி.தேவி அறக்கட்டளை, பி.தேவி குழந்தைகள் அறக்கட்டளை, தினோத் அறக்கட்டளை, அகர்வால் குடும்ப அறக்கட்டளை, தேவி லிமிடெட், சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவை அடங்கும்.
கருப்பு பண விசாரணையில் நிர்வாகரீதியான உதவி தேவை என்று இந்தியா வேண்டுகோள் விடுத்ததன் பேரில், சுவிட்சர்லாந்து நோட்டீஸ்களை அனுப்பி உள்ளது.