உலகம்
பற்றி எரியும் அமேசான் காடுகள்..



உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது.
இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த பருவத்தில் காடுகளில் தீ பிடிப்பது இயல்பு என்றாலும் அமேசான் காட்டில் தீ பரவுவது சற்று கடினம் தான். எனினும் தற்போது மக்களின் செயல்பாடுகளால் காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.