தொழில்நுட்பம்

பூமியிலிருந்து இன்று பிரிகிறது சந்திரயான்-2

நிலவை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘இஸ்ரோ’வால் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது,

சந்திரயான் -2 விண்கலம், இன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து, நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும்.

ஆந்திராவின், ஸ்ரீஹரிகோடா விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ஜூலை22 ல், நிலவுக்கு பயணம் மேற்கொண்டது, சந்திரயான் – 2 விண்கலம். 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன.

இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 3:00 – 4:00 மணிக்குள், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு உந்தப்படுகிறது.

இதற்கான பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வரும், 20 ம் தேதி, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் சந்திரயான் – 2, மேலும் பல நாட்கள் பயணித்து, செப்டம்பர் 7-ல், நிலவில் தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை, நிலவின் தென் பகுதியில், எந்த நாட்டின் விண்கலங்களும் தரையிறங்காத நிலையில், அந்த சாதனையை, இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close