இந்தியாதொழில்நுட்பம்

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும்போது சிக்னல் துண்டிப்பு

சந்திரயான் 2 திட்டத்தின், லேண்டர் விக்ரம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும்போது 2.1 கிலோமீட்டர் உயரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஆராயப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

978 கோடி ரூபாய் செலவில் தயாரான சந்திரயான்-2 விண்கலம் 3,850 கிலோ எடை கொண்டதாகும்.ஜூலை 22-ம் தேதி, பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 2ஆம் தேதி பகல் 12.45 மணியில் இருந்து 1.45 மணிக்குள் சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.

சனிக்கிழமை அதிகாலை 1.40 மணிக்கு, 30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது, லேண்டர் விக்ரம் சுற்றுவது நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கி தரையிறக்கும் பணி தொடங்கியது.

திட்டமிட்டபடி வெற்றிகரமாக லேண்டர் விக்ரம் இறங்கிக் கொண்டிருந்த நிலையில், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் விக்ரம் இருந்தபோது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

லேண்டர் விக்ரமில் இருந்து சிக்னல் கிடைப்பதற்காக விஞ்ஞானிகள் கவலைதோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல பரபரப்பு அதிகரித்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்ற விவரத்தை இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

ஓராண்டு காலம் நிலவை சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் 2ன் அங்கமான ஆர்பிட்டர், பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பும் என்று இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள விக்ரம் லேண்டர் குறித்தும் ஆர்பிட்டர் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் எனவும் அந்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker