தொழில்நுட்பம்

சந்திராயன் 2 விண்கலத்தை

சந்திராயன் – 2 விண்கலத்தை தயாரிக்கும் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று இந்த மாதம் முடிவு பெற்றது .இறுதியாக ஜூலை மாதம் 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் சந்திராயன் – 2 விண்கலம் விண்ணில் ஏவ தயாராக இருந்தது .

ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது . இந்த கோளாறுகளை சரிசெய்து ஜூலை 22 ஆம் நாள்  பிற்பகல் 2.43 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம்  சந்திராயன் 2 விண்கலம்  விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில் , இன்று இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்ட படி 2 வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர் . மேலும் தற்போது விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியுள்ளது . விண்கலம் நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் ஆகஸ்ட் 20 – ம் தேதி அன்று பயணிக்க தொடுங்கும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவித்துள்ளனர் .

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close