இந்தியாதொழில்நுட்பம்லைப் ஸ்டைல்

5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் முக்கிய அத்தியாயமான ‘சந்திரயான் 2’ ஜூலை 22-ஆம் தேதி  மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பாக நிலவை பற்றி ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-1’-யை தொடர்ந்து, சுமார் 11 வருடங்கள் கழித்து  ‘சந்திரயான் 2’ விண்ணில் செலுத்தப்பட்டது,

இதுவரை எந்த உலக நாடுகளும் செய்யாதவாறு நிலவின் தென்துருவத்தை இது ஆராய்ச்சி செய்யவுள்ளது.

இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும். இதற்காக ஏற்கெனவே நான்கு முறை வட்டப் பாதை உயர்த்தப்பட்டது.இந்நிலையில் இன்று பிற்பகல் 3.04 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் 5-ஆவது மற்றும் கடைசி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்பிறகு விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க வெற்றிகரமாக தரையிரங்க உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்பகுதியில் சந்திரயான் 2 வெற்றிகரமாக இறங்கும் போது அந்த நாடும் செய்யாத ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அதற்கான முழுபணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close