சினிமா
காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.



கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் காலமானார்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.
அவருக்கு வயது 42 ஆகும். திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்பொழுது அவர் காலமானார்.
இவரது மறைவு செய்தி சின்னத்திரை பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.