அரசியல்
தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!



செப்டம்பர் 8 ம் தேதியான நாளை தேசிய கண் தான தினமாக அனுசரிக்கப்பட இருக்கிறது.
பொதுமக்களிடையே கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தாமே முன்னுதாரணமாக திகழும் வகையிலும் தமிழக முதல்வர் எடப்பாடி கண் தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு அதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளார்.
அந்த சான்றிதழில் செப்டம்பர்6 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், நற்பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.