சினிமா

கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு கொரோனா.

இவர் தமிழில் வினய், சந்தானத்துடன் மிரட்டல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விமல் ஆஸ்னா சவேரி நடித்து திரைக்கு வந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தை தயாரித்து இருந்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது.

இந்நிலையில் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஷர்மிளா மந்த்ரே தனது ட்விட்டர் பதிவில்

“அனைவருக்கும் வணக்கம். எனக்கும், என் குடும்பத்தினர் சிலருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளே இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம்.
நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவரின் அறிவுரைக்கேற்ப சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்”.

இவ்வாறு ஷர்மிளா மந்த்ரே தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close