Corona

கொரோனா தடுப்பூசிக்காக 75 லட்சம் பேர் பதிவு

#coWIN

#coWIN
புதுடில்லி: கொரோனா தடுப்பூசிக்காக இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளது

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் கோவின் (coWIN) டிஜிட்டல் தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் கோவின் செயலியில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, தடுப்பூசிக்கான ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்த பணியாளர்களுக்கு, தடுப்பூசிக்கான நாள், நேரம், இடம் ஆகியவை, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவின் செயலியில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close