சினிமா
அசுரன் அப்டேட்-தனுஷின் 2-வது லுக் வெளியீடு



வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தில் தனுஷின் 2-வது லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தனுஷின் 2-வது கெட்டப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கெட்டப்புக்கு பலரும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் வெற்றிமாறன்
#Asuran look 2 pic.twitter.com/3zCkH4vhED
— Dhanush (@dhanushkraja) August 22, 2019