அரசியல்தமிழ் நாடு
தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்



தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி – தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒன்று கூடிய கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெற்றி அறிவிப்பு வந்ததும் இனிப்புகள் வழங்கி, ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மேளதாளங்கள் இசைத்து நடனமாடி தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.