உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி



முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்
முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருண் ஜெட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை. அவர் அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உடல்நிலை சிக்கல் காரணமாக அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கி இருந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இன்று காலை முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலும், மருத்துவர்கள் குழு முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பா.ஜனதா தலைவர்கள் எய்ம்ஸ்-க்கு நேரில் வருகை தந்துள்ளனர்….