தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.320 உயர்வு



தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை, வரலாறு காணாத வகையில் சவரன் 29 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது.
இந்நிலையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் குறைந்தது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலளித்தது. இதனிடையே தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து, 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 80 காசுகள் வரை அதிகரித்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 48 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது