அழகுதமிழ் நாடு

தாறுமாறாக உயரும் தங்கம் விலை..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை  27,326 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

தங்கத்தின் விலை கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று 3383 ரூபாயாக இருந்த ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை அன்று 33 ரூபாய் உயர்ந்து 3416 ரூபாய்க்கு விற்பனையானது.

இதே போன்று வெள்ளிக்கிழமை அன்று 27,064 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரண தங்கம், சனிக்கிழமை அன்று 264 ரூபாய் உயர்ந்து 27,328 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் இதுவரை இந்தவிலைக்கு விற்பனை செய்யப்பட்டதே இல்லை.

இந்நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று 44 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், சனிக்கிழமை அன்று 20 காசுகள் உயர்ந்து 44 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது. இதே போன்று வெள்ளிக்கிழமை அன்று 44,300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, 200 ரூபாய் உயர்ந்து 44,500 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட, அதன் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது ஒரு காரணமென வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விலை உயர்வு அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close