தமிழ் நாடு

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close