தமிழ் நாடு

அடுத்து இரு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

தமிழகத்தில் அடுத்து இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை – நாகைப்பட்டினத்திற்கு இடையே பூமியில் இருந்து 3 முதல் நான்கு கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சங்கமம் நிலவுகிறது. தமிழகத்தின் தெற்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் வரும் காற்று சங்கமிப்பதால், மழைக்கான சூழல் உருவாகி உள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close