சமையல்

மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

How to Cook Milagai Bajji

தேவையானவை

பஜ்ஜி மிளகாய் – 10
கடலை மாவு – 1 கப்
போட கலர் ஆரஞ்ச் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
சோடா உப்பு – ஒரு பின்ச்
நிலக்கடலை – ஒரு கப்
உப்பு – சிறிதளவு
பூண்டு – 1
வர மிளகாய் – 5

செய்முறை

முதலில் பஜ்ஜி செய்ய தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் நிலக்கடலையை வருத்து தோலுரித்து மிளகாய், பூண்டோடு சேர்த்து போடி செய்து கொள்ள வேண்டும். பின் கடலைமாவில் உப்பு, புட் கலர் சேர்த்து இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்க வேண்டும்.

மிளகாயில் ஒரு பக்கம் நீளமாக கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி ஒரு தேக்கரண்டி நிலக்கடலை பொடியை வைக்க வேண்டும். பின் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.

சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close