சமையல்

பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி

முழு பச்சைப் பயறு – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
பூண்டுப் பல் – 5,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயத்தை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

ப.மிளகாயை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

பச்சைப்பயறை 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

ஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து வேகவிடவும்.

பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும். சூப்பரான பச்சைப்பயறு கஞ்சி ரெடி.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker