இந்தியா

இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் 3 பாக். வீரர்கள் பலி

இந்தியாவில் அதிரடி தாக்குதலில், 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். சுதந்திர தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், காஷ்மீரில் மாநிலத்தை ஒட்டியமைந்துள்ள எல்லையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் கடுமையான பதிலடி கொடுத்தனர். இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும், தக்க பதிலடி கொடுத்து விரட்டியடித்தனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close