சினிமா
கைதி படம் குறித்து நடிகர் கார்த்தி ட்வீட்



கைதி படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். முக்கிய வேடங்களில் நரேன், ரமணா, தீனா ஆகியோர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தை வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
#Kaithi #கைதி #KaithiOctoberRelease pic.twitter.com/qFtH7USLCW
— Actor Karthi (@Karthi_Offl) August 25, 2019