சினிமா
இன்று கென்னடி கிளப் படத்தின் அப்டேட்.



பெண்கள் கபடி போட்டியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் காயத்ரி, சூரி மற்றும் பல நடிக்கின்றனர். சசீந்திரன் இயக்கத்தில் இயக்குநர் சமுத்திரகனி, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கொன்னடி கிளப்.
ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
படத்தை நாளை (ஆகஸ்ட் 22-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது.