சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சாதனை



சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சாதனை
தமிழகத்தில் 1982ஆம் ஆண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முக்கியமான ஒன்று, தானம் கொடுப்போரின் ரத்த வகையும், தானம் பெறுவோரின் ரத்த வகையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
இது உயிருக்கே ஆபத்தாகி விடும் என்ற காரணத்தால், ரத்த வகை ஒரே மாதிரியாக இருப்பது முக்கியமாக பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியால், தற்போது எந்த வகை ரத்தம் உடையோரின் சிறுநீரகத்தையும் யாருக்கு வேண்டுமானாலும் பொருத்த முடியும் என்ற நிலை வந்து விட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இதுவரை 6 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுநீரகவியல் துறைத் தலைவர் பெரியசாமி தலைமையிலான குழுவினர் இந்த அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படும் உறவினருக்கு ஒருவர் தானம் கொடுக்க முன்வந்தால், ரத்த வகை என்ற கட்டுப்பாடு குறுக்கிடும். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டதால், இனி கவலை வேண்டும்.