கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் நடத்த மனு



கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணையில் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த இரண்டு வாரங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இரண்டு நாட்களில் அந்த மனுக்கள் மீது காவல்துறை முடிவு எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பங்களை காவல்துறை நிராகரித்து உத்தரவிட்டிருந்தால், அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் காவல்துறையிடம் விண்ணப்பம் மட்டுமே அளித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடரக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.