


இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.என்றாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தன்னை தயாராக்கி வருகிறார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில் கோலி,ரோகித் சர்மாவை முந்திக்கொண்டு முதலிடத்தில் இருந்து வருகிறார். தற்போது கிரிக்கெட் உபகரண கவசங்களோடு நம் நாட்டின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு மிதாலி கையில் மட்டையை பிடித்து கொண்டு மிடுக்காக கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூகவலைதலங்களில் வெளியாகியது.
இந்நிலையில் இந்த வீடியோவானது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் அதனை மகளிர் தினத்தை முன்னிட்டு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிதாலி பதிவிட்டு உள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.