இந்தியா
பிரதமர் மோடி – சீன அதிபர் நாளை சென்னைக்கு வருகை

நாளை சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.