ஆரோக்கியம்

கர்ப்பிணி பெண்கள் கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும்..!ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கர்ப்பிணி பெண்கள் கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும்..!ஆய்வில் அதிர்ச்சி தகவல்

காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது.

தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது.

கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன. கொரோனா வைரஸ் மனிதனின் எந்ததெந்த உறுப்புகளை தாக்கும், எப்படி தாக்கும் என்பது பற்றி தினமும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தற்போது புதிய ஆறு அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு வரிசையில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வு முடிவில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

பெரும்பாலான வைரஸ்கள் நச்சுக்கொடி மூலம் கர்ப்பிணி பெண்ணின் கருப்பைக்கு சென்று கருவை பாதிக்கின்றன. அதேபோல், கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close