சினிமா

நேர்கொண்ட பார்வை இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

நேர்கொண்ட பார்வை திரைப்படம் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்…

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம், சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் பே வியூ புராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி, ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இணையதளங்களில் சட்டவிரோதமாக படம் வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாகவும், இந்த இணையதளங்களில் படம் வெளியாவதை தடுக்குமாறு இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேர்கொண்ட பார்வை படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்குமாறு இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker