ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 07-08-2019

மேஷம்

தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல்– கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாகப் பேச்சுக்கள் மீண்டும் வந்து சேரலாம்.

ரிஷபம்

தொழில் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு பலன் தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

மிதுனம்

குடும்ப வருமா னத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் அதிகரிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவிடையும். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

சிம்மம்

மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

கன்னி

வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் உருவாகும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

துலாம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.  உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உயர் அதிகாரிகளின் மூலம் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

விருச்சகம்

முன்னேற்றம் கூடும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.  குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில்ஆர்வம் காட்டுவீர்கள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும்.

தனுசு

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத் தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்

காசு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும்.

கும்பம்

வளர்ச்சி கூடும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் வாங்குவது சம்மந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.

மீனம்

எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். பொறுப்புகள் கூடலாம். சிரித்துப் பேசிய நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker