தமிழ் நாடு
தமிழகத்தின் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு



தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, நீலகிரி மாவட்டம் அவாலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் இதுவரை பெய்யாத அளவிற்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும், இதுகுறித்து ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உறுதிப்படுத்த உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது