சினிமா

கிராமத்து கதையில் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ஏற்கனவே மும்பை படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் டைரக்டர் சிவாவை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சந்தித்து கதை கேட்டார். அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் முந்தைய படங்களான எஜமான், படையப்பா சாயலில் கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இது அவருக்கு 168-வது படம்.

படப்பிடிப்பு 2, 3 மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு மும்பை பகுதியில் 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு தனி கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது மீண்டும் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker