கோயம்புத்தூர்

ரவுடிகள் கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தமிழகத்தில் சில ஆண்டுகளாக ரவுடிகள் பயங்கர ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் கொண்டாடுவதும், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிடும் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

Rowdies-screaming-sickle-cake-cutting-and-celebrating-birthdays-in-covai-Tamil-Nalithal-News

சேலத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் சென்னையில் ரவுடி வினோத் தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி கைது செய்யப்பட்டது..

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close