சினிமா

மஹா போஸ்டர் சிம்புவின் புதிய தோற்றம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மஹா போஸ்டர் மகிழ்ச்சி அளித்துள்ளது.

யு. ஆர். ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அவர் விமானியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹன்சிகாவுக்கு காதலன் சிம்பு தான். இந்நிலையில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் விமானி சீருடையில் சிம்பு ஸ்டைலாக இருக்கிறார்.

படத்தை துவங்கியபோதே இந்த கதாபாத்திரம் என் மனதில் இருந்தது. எஸ்.டி.ஆருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டதும் ஷூட்டிங்கை துவங்கினோம். சிம்புவின் கதாபாத்திரம் முக்கியமானது என்பதால் அது வரும் நேரத்தை நீட்டித்தோம் என்கிறார் ஜமீல்.

சிம்புவின் கதாபாத்திரம் கோவாவை சேர்ந்த விமானியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சிம்புவின் கதாபாத்திரத்திற்கு ஒரிஜினல் விமானி சோயபின் பெயர் வைக்காமல் ஜமீல் என்று வைத்துள்ளோம்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close