சினிமா

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – சிபிஐ தீவிர விசாரணை

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மும்பை பாந்த்ரா காவல் நிலையம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றதாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து சுஷாந்த் சிங் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை தந்தனர். மும்பை போலீசாரும், தடயவியல் துறையினரும் சுஷாந்த் சிங் வீட்டிற்கு வந்திருந்தனர்.

வீட்டில் இருந்தவர்கள் மற்றும் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சூழல் ஆகியவை பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானியிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள், மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் இல்லத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close