பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு



தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாளை தயாரித்து பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது.
இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அனைத்து பள்ளிகள், மாணவர்கள் பயனடையும் வகையில் மாதிரி வினாத்தாளை இணையத்தில் வெளியிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnscert.org என்ற இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு உள்ளது.
மாதிரி வினாத்தாளை, பதிவிறக்கம் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.