தமிழ் நாடு

அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளதாகவும, அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள், அடுத்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close