சினிமா

படத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார்

தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் மாயமானதாக வெளியான தகவல் பொய் எனவும் தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகி தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் ஷமன் மித்ரா. இவர் தொரட்டி என்ற திரைப்படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த ஷமன் மித்ரா, அதில் பொள்ளாச்சியை சேர்ந்த தனது படத்தின் கதாநாயகி சத்யகலாவை, அவரது தந்தை கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகி சத்யகலா, படத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார் அளித்துள்ளதாகவும், தயாரிப்பாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என குற்றம்சாட்டினார்

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker