ஆன்மீகம்தமிழ் நாடு

அத்திவரதர் தரிசனம் இன்றுடன் முடிவடைகிறது

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அத்திவரதரை 48 நாட்களுக்கு பின்னர் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதிகளும் இல்லை என்பதால், தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1703ம் ஆண்டு கோவில் நிர்வாகிகள், குளத்தை சுத்தப்படுத்திய போது, அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 1937ம் ஆண்டு மீண்டும் வெளியே எடுக்கப்பட்ட சிலை 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

42 ஆண்டுகளுக்கு பின்னர் 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசித்ததாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசன நாட்கள் 40 லிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாகவும், எந்த ஒரு விதியும் இல்லாத நிலையில் தரிசன நாட்களை நீட்டிக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது….

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker