விவசாயம்

ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம்

நேரடி நெல் விதைப்பு ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம்

விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 43.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடப்புப் பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும்போது சுமார் 40 முதல் 45 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாள்கள் முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகிவிடும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பாசன வசதி துணையோடு நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட வேளாண் மக்களும் மேற்கண்ட உழவு மானியத்தைப் பெற்று, நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker