


மேஷம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பதில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவலொன்று வந்து சேரும்.
ரிஷபம்
உறவினர்களால் உற்சாகம் பெருகும் நாள். திருமண முயற்சிகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும் விதத்தில் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை நாளை செய்யலாம் என்று பாதியில் விட்டு விடுவீர்கள்.
கடகம்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும். இடம், பூமியால் லாபம் உண்டு.
சிம்மம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்க விரயங்கள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உருவாகும். உறவினர் பகை உருவாகும்.
விருச்சிகம்
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் உயரும். உத்தி யோகம் சம்பந்தமாக சில அனுபவமிக்க வர்களை சந்திக்கும் சூழ்நிலை உண்டு. கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கூடும்.
தனுசு
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒளிமயமான எதிர்காலத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
மகரம்
சகோதர வழியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். குழந்தைகளின் திருமண முயற்சி முடிவாகும்.
கும்பம்
வசதி, வாய்ப்புகள் பெருகும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தில் கல கலப்பான சூழ்நிலை உருவாகும். சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மீனம்
பொது வாழ்வில் பொறுப்புகள் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். போட்டிகளைச் சமாளித்து வெற்றிகாண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.