


இந்தியாவில் தற்போது மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமான எண்ணிக்கை பதிவாகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 8,308 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,92,589 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 258 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர், இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,452 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,217 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,60,357 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் 1,20,480 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.