ஜோதிடம்

இன்றைய (03.01.2020) ராசி பலன்கள்

மேஷம்

இன்று நல்ல பலன் கிடைக்காது. பொறுமை இழக்கும் சூழல் உருவாகும். பொறுமையுடன் இருக்க வேண்டும். கவனமாக பேச வேண்டும்.

ரிஷபம்

பணிகள் நிறைய இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். உங்கள் பேச்சு வெற்றியை கொடுக்கும்.

மிதுனம்

உற்சாகமான தருணங்கள் இருக்கும். தைரியமான முடிவுகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். பேச்சாற்றல் மூலம் நீங்கள் நினைத்த காரியம் முடியும்.

கடகம்

இன்று எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும். கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை மூலம் மன அமைதி கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. தடைகள் ஏற்படும். கவனமின்மை காரணமாக மதிப்புமிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.

கன்னி

வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். புத்திசாலித்தனமும் திறமையும் நல்ல லாபத்தை கொடுக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள்.

துலாம் : உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் முயற்சிகளை எளிதில் செய்து வெற்றியை பெறுவீர்கள்.

விருச்சிகம்

உங்கள் லட்சியங்களை அடைய இன்று கடினமான பாதைகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள். முக்கிய முடிவு எடுக்க வேண்டாம்.

தனுசு

திடமான நம்பிக்கையும் உறுதியும் இன்று உங்களிடத்தில் இருக்கும். சூழ்நிலையை கையாளும் திறமை இன்று உங்களிடத்தில் இருக்கும். நம்பிக்கை இருந்தால் நினைத்தது நடக்கும்.

மகரம்

உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை மூலம் கனவுகள் நிறைவேறும்.

கும்பம்

இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். வேகத்தை குறைத்து நிதானமாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றத்தை காணலாம்.

மீனம்

எந்த ஒரு விஷயத்தையும் நன்றாக யோசித்து என்ன செய்ய வேண்டும் என யோசித்துசெயல்பட வேண்டும். அதன் மூலம் தேவையற்ற விளைவுகளை தவிர்க்கலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close