இன்றைய ராசி பலன்கள் 10-08-2019



மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் அதிகரிக்கும். உறவினர்களால் மனக்குழப்பம் ஏற்படும். தொகையைச் செலவிடுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
தொட்டது துலங்கும் நாள். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கல்யாண வாய்ப்புக் கைகூடும். நீண்ட நாள் பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும்.
மிதுனம்
உத்தியோக முயற்சியில் பலன் கிட்டும் நாள். ஊர்மாற்றம் உறுதியாகலாம்.வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணம் பலன் தரும்.
கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. திடீர் செலவுகளை சமாளிக்க வரவு வரும். நீண்டதூரப் பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும் நாள். நல்ல தகவல்கள் இல்லம் தேடி வந்து சேரும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு.
கன்னி
முக்கியப் பிரமுகர்களால் முன்னேற்றம் கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். கொள்கை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மாலை நேரம் பயணத்தால் பலன் உண்டு.
துலாம்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
விருச்சகம்
செல்வநிலை உயரும் நாள். செல்வாக்கு மேலோங்கும். வருமானம் இருமடங்காகும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தனுசு
சொல்லைச் செயலாக்கி காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு கைகூடும். பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
நட்பால் நலம் கிடைக்கும் நாள். நாட்பட்ட நோய் அகலும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வியாபாரம், தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கும்பம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
மீனம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்க வர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பயணங்களால் பலன் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.