இன்றைய ராசி பலன்கள் 11-08-2019



மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நிதிநிலை உயர எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வரலாம்.
ரிஷபம்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். அதிக விலை கொடுத்து சில பொருட்களை வாங்கியும், திருப்தி இல்லாமல் போகலாம். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்
மிதுனம்
வீட்டு பராமரிப்பில் அக்கறை காட்டும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
கடகம்
உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் திடீர் திருப்பம் ஏற்படும்.
சிம்மம்
மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். செல்போன் வழி தகவல் சிந்திக்க வைக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.
கன்னி
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தடுமாற்றங்கள் அகலும். உறவினர் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
வெளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
விருச்சகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பாராட்டும் புகழும் கூடும். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
தனுசு
ஏமாற்றத்தைத் தவிர்க்க எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக செலவிடுவீர்கள். எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடு இருந்தாலும் மனக்குறை ஏற்படும்.
மகரம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். சகோதர ஒற்றுமை பலப்படும். வழிப்பாட்டில் நம்பிக்கை வைப்பீர்கள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.
கும்பம்
புதிய பாதை புலப்படும் நாள். இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரலாம். யாரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களே உங்களைத்தேடி வருவர். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்தபடி அமையும்.
மீனம்
துன்பங்கள் தூளாகும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நடக்குமோ, நடக்காதோ என்று நினைத்த காரியங்கள் நல்லவிதமாக நடைபெறும். சொத்துக்கலால் லாபம் உண்டு.